திருமழிசையில் காய்கறி சந்தை

முதல் நாளே விலை குறைந்த காய்கறிகள்

கோயம்பேடு காய்கறி சந்தை காரணமாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவியதால் அந்த காய்கறி சந்தை மூடப்பட்டு அதற்கு பதிலாக திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை இன்று முதல் தொடங்கியுள்ளது

இன்றைய முதல் நாளே 450 லாரிகளில் சுமார் 6000 டன்கள் காய்கறிகள் வந்துள்ளது. மேலும் முதல் நாளே காய்கறிகள் விலையும் குறைந்துள்ளது

தக்காளி ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.14, பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.25, பீட்ரூட் ரூ.30, பாகற்காய்-25, கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி ரூ.25 என்ற விலையில் திருமழிசை சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply