திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்திற்கு அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இலவச தரிசனம் அனுமதிக்கப்படுகிறது என டிடிடி தேவஸ்தானம் அறிவித்துள்ளது

ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசனம் செய்வதற்கான அனுமதி வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் மட்டும் இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தினமும் 2,000 டிக்கெட்டுகள் மட்டுமே இலவச தரிசனத்திற்காக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் டிடிடி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது