இன்று முதல் டாஸ்மாக் ஓப்பன்

சென்னை நபர்கள் எல்லை தாண்டினால் கைது

தமிழகம் முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ள நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் காரணத்தால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் சென்னையில் உள்ளவர்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சென்று மது வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ளவர்கள் இருப்பிட முகவரியுடன் கூடிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே மது வாங்கலாம் என்றும் அவ்வாறு இருப்பிடச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டாஸ்மாக்கில் மது வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்க முயற்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் செயல்பட உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.