இன்று முதல் பள்ளிகள் திறப்பு: என்னென்ன நிபந்தனைகள்?

students

நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது

மாணவ மாணவிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பள்ளியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

40 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வரவுள்ளனர் என்பதும், பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.