மகிழ்ச்சியும் அதிருப்தியும்!

தமிழகத்தில் ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடங்குகிறது

இதனையடுத்து சென்னையில் உணவகங்கள் மற்றும் ஆன்லைன் உணவு காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை இயங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் தேநீர்‌ கடைகள்‌, காய்கறி கடைகள்‌ மற்றும்‌ மளிகைக்கடைகள்‌ ஆகியவை காலை 6.00 மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை இயங்கலாம்

வணிக வளாகங்கள்‌, ஜவுளி, நகைக்கடைகள், ஷோரூம்கள்‌ ஆகியவை காலை 10.00 மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை இயங்கலாம் என்றாலும் மால்கள் திறக்க அனுமதி இல்லை.

இந்த தளர்வுகளால் இன்று முதல் சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள் என்றாலும் பேருந்து போக்குவரத்து இல்லை என்பது ஒரு அதிருப்திக்குரிய விஷயமாகும்

Leave a Reply