shadow

இன்று முதல் தபால் நிலையங்களில் கங்கை புனித நீர். மத்திய அமைச்சர் தகவல்

ganga-waterஇந்துமத மக்கள் புனிதமாக கருதும் கங்கை தீர்த்தத்தை பக்தர்களின் வீட்டுக்கே தபால் மூலம் அனுப்பும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளதால் இந்துமத மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கங்கையின் புனித நீரை தபால் அலுவலகங்கள் மூலம் இந்தியா முழுவதும் வழங்கும் திட்டத்தை நேற்று மத்திய தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பாட்னாவில் தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்தின்படி, கங்கோத்ரி மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட கங்கையின் புனித நீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு அனைத்து தபால் நிலையங்களிலும் விற்கப்படும். தபால் நிலையத்திற்கு செல்ல முடியாதவர்களுக்கு வீடுதேடி தபால் மூலம் புனித நீர் அனுப்பி வைக்கப்படும். சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் புனித கங்கை நீர் கிடைக்கின்றது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, ‘மிக குறுகிய காலத்தில் திட்டம் செயல்வடிவம் பெற்றுவிட்டது. கடந்த மே 30-ம் தேதி விவாதிக்கப்பட்ட இத்திட்டம், 2 மாதத்தில் தொடங்கிவிட்டது. இத்திட்டம் வெற்றி பெறுவதில், தபால் துறையின் நம்பகத்தன்மை மிக முக்கிய பங்காற்றும்’ என்று கூறினார்.

இ-காமர்ஸ் இணைய தளங்களின் மூலம் சில தனியார் அமைப்புகள் கங்கை தீர்த்தத்தை அனுப்பி வருகின்றன. ஆனால் கோமுகியில் இருந்து சேகரிக்கப்படும் இந்த புனித நீர் லிட்டர், ரூ.299 என்ற விலையில் விற்கப்படும் நிலையில் அரசு வெறும் ரூ.15க்கு விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply