தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஜனவரி 10ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என பிரதமர் மோடி அவர்கள் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று முதல் நாடு முழுவதும் பூச தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படுகிறது.
முதல் கட்டமாக மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.