இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி மையம் இயங்கும்!

தமிழகத்தில் இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி மையங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதே காரணம் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் இன்று முதல் இருபத்தி நான்கு மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே இதனை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்துமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது