மதுக்கடை திறக்க கவர்னர் அனுமதி:

புதுச்சேரியில் திங்கள் மதுவிற்பனை

புதுச்சேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் புதுவை கவர்னர் ஒப்புதல் இல்லாத காரணத்தினால் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மது பிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்

இந்த நிலையில் சற்று முன்னர் புதுச்சேரி கவர்னர் அவர்கள் மதுக்கடைகளைத் திறக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

இதனை அடுத்து வரும் திங்கட்கிழமை முதல் புதுவை மாநிலத்தில் மது கடைகள் திறக்கப்படும் என தெரிகிறது

மொத்த மதுக்கடைகள் மற்றும் சில்லரை விட கடைகள் என இரண்டு வகை மதுக்கடைகளும் திங்கள் முதல் திறக்கப்படும் என்று கூறப்படுவதால் புதுவையில் உள்ள மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இருப்பினும் தமிழகத்தில் இருந்து மது வாங்க வருபவர்களை தடுக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் புதுவை போலீசார் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply