shadow

மார்ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை: ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் போராடி வரும் நிலையில் கடந்த மார்ச் 27-ம் தேதியில் இருந்து முதல் உலை இயங்கவில்லை என ஸ்டெர்லைட் நிர்வாகம் எழுத்துபூர்வமான அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகளுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த மார்ச் 27-ம் தேதி இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு முதல் உலை மூடப்பட்டதாகவும், மூடப்பட்ட உலையின் தற்போதைய மதிப்பு ரூ.2100 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வெளியான பின்பே முடிவு தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply