200 பயணிகள் ரயில்களின் கால அட்டவணை:

 வெளியிட்டது மத்திய அரசு!

ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே கூறிய நிலையில் அந்த 200 ரயில்களுக்கான கால அட்டவணையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது

இதன்படி ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் 200 பயணிகள் ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று அதாவது மே 21ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது

நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தியன் ரயில்வே ஏற்கனவே 366 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது இந்த 200 ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்புகளை ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த ரயில்கள் மூலம் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள் என்று கருதப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.