சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்று மட்டும் 58 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாகவும் இதனை அடுத்து 969 பேருக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் தமிழக தலைமைச் செயலாளர் நேற்று மாலை தெரிவித்தார்

இந்த நிலையில் மளிகை கடைகள் பால் மற்றும் காய்கறிகள் விற்பனை நேரத்தை குறைத்துக் கொண்டே வரும் தமிழக அரசு, ஒரு ஆறுதலாக இன்று முதல் பேக்கரிகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் காலை 6 மணி முதல் பகல் 1 மணிவரை அனைத்து பேக்கரிகளும் இயங்கலாம் என்றும் பேக்கரிக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்

இதனால் பேக்கரி பொருள்கள் இன்று முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply