shadow

பறக்கும் விமானத்தில் பிரசவம் பார்த்த முன்னாள் பிரான்ஸ் அமைச்சர்
france
விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அதே விமானத்தில் பயணம் செய்த முன்னாள் பிரெஞ்ச் அமைச்சர் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து சாட் நாட்டுக்கு நேற்று ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், விமானப் பணியாளர்கள் விமானத்தில் யாரேனும் மருத்துவர்கள் இருந்தால் உதவிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தனர்.

அதே விமானத்தில் பயணம் செய்த முன்னாள் பிரெஞ்சு கேபினட் அமைச்சர்  பிலிப் தூஸ்த் அந்த கோரிக்கையை ஏற்று அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க உதவினார். இவர் ஒரு இதயநோய் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமானம் அல்ஜீரியா வான் பரப்பில் 9,000 மீட்டர் உயரத்தில்  பறந்து கொண்டிருந்த அந்தப் பயணிக்கு அழகான ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது. முன்னாள் அமைச்சராக இருந்தும் அவசரத்திற்கு பிரசவம் பார்க்க உதவிய பிலிப் தூஸ்த் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply