உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அபார வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அபார வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆஸ்திரேலியா – பிரான்ஸ் அணிகள் மோதின.

இன்றைய ஆஸ்திரேலியா – பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரான்ஸ் அணி அடுத்தடுத்து 4 கோல்கள் போட்டது. ஆனால் ஆனால் ஆஸ்திரேலிய அணியினர் ஒரே ஒரு கோல் மட்டுமே போட்டனர்.

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மெக்ஸிகோ மற்றும் போலந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடவில்லை என்பதால் போட்டி டிரா ஆனது.