shadow

பராமரிப்பு பணிகள் காரணமாக 4 ரயில்கள் சேவை இன்று முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள் இதோ:

1. திருப்பதி-காட்பாடி (07661) இடையே இரவு 7.25 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் தற்காலிக ரத்து

2. காட்பாடி-திருப்பதி (07662) இடையே காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் இன்று முதல் 31ம் தேதி வரை தற்காலிக ரத்து

3. பித்ரகுண்டா-சென்னை சென்ட்ரல் (17237) இடையே காலை 4.45 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் தற்காலிக ரத்து

சென்னை சென்ட்ரல்- பித்ரகுண்டா (17238) இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் இன்று முதல் 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து

மேற்கண்ட தகவல்களை அறிந்து பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை மாற்றி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

ரயில்கள், ரத்து, தெற்கு ரயில்வே, railway, train, cancel