காண்டாமிருக கொம்பு: பெண் உள்பட நால்வர் கைது!

சட்டவிரோதமாக காண்டாமிருக கொம்பு வைத்திருந்த நான்கு பேர் அசாம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அசாம் மாநிலத்தில் காண்டாமிருக கொம்புகள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து அதிரடியாக சோதனை செய்யப்பட்டது

இந்த சோதனையில் Dibrugarh என்ற பகுதியில் நான்கு பேர் காண்டாமிருக கொம்பு வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்

இதனை அடுத்து பெண் உள்பட நான்கு பேர் சட்டவிரோதமாக காண்டாமிருகக் கொம்பு வைத்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்

தற்போது பாரன்சிக் துறைக்கு அந்த காண்டாமிருக கொம்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Leave a Reply