இன்னும் 4 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்னும் 4 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்னும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதனால் மழை தொடரும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.