இந்தியாவில் நாளை நடைபெற உள்ள ஃபார்முலா 1 கார் பந்தயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாராணை அடுத்த வாரம் தள்ளிப் போயிருப்பதால், நாளை திட்டமிட்டபடி பார்முலா 1 கார் பந்தயம் நடக்கிறது. இந்த போட்டி டெல்லியை அடுத்த நொய்டாவில் நாளை நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமித்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளி போய் இருப்பதாக வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் ஒருவர் நேற்று தெரிவித்தார். இதன் மூலம் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுகிறது.

11 அணிகளை சேர்ந்த 22 வீரர்களும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். இரண்டு பயிற்சி போட்டியிலும் நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்தை பிடித்தார். இன்று தகுதி சுற்று போட்டி நடைபெறுகிறது. தமிழகத்தை சேர்ந்த நரேன் கார்த்திகேயன் தகுதி பெறுகிறாரா இல்லையா என்பது நாளை தெரிந்துவிடும்.

Leave a Reply