shadow

முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி மரணம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவியும், ஜார்ஜ் டபுல்யூ. புஷ்சின் தாயாருமான பார்பரா புஷ் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். மனைவி பார்பரா புஷ் சமீபத்தில் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பார்பரா புஷ் தனது 92வது வயதில் நேற்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மரணம் அடைந்த பார்பராவுக்கு அமெரிக்கர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply