shadow

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் காலமானார்.

APJ-Abdul-Kalamஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், பிரபல விஞ்ஞானியுமான அப்துல்கலாம் உடல்நலக் குறைவால் ஷில்லாங் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேகாலயாவில் உள்ள ஷில்லாங் நகரின் ஐஐஎம்மில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அவர்  மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்று இரவு 7 மணிக்கு ஷில்லாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல் கலாமுக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சற்றுமுன் அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2002 முதல் 2007ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது 1997ல் கிடைத்தது.

Leave a Reply