முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விடுதலை: ஆனாலும் ஒரு நிபந்தனை!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் மீது பதிவு செய்யப்பட்டிருந்த மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர் விடுதலையாகி உள்ளார்

இருப்பினும் அவர் திருச்சியில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை நீதிமன்றம் விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

திமுக தொண்டரை தாக்கிய வழக்கு மற்றும் அனுமதியின்றி போராட்டம் செய்த வழக்கில் ஏற்கனவே அவருக்கு ஜாமீன் கிடைத்து இருந்த நிலையில் நேற்று நில மோசடி வழக்கில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து இன்று அவர் புழல் சிறையில் இருந்து விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது