முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை அடுத்த மாதம் வரை சிறையில் அடைக்க உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாகவும், அவரை அரைநிர்வாணப்படுத்தி ஜெயக்குமார் தாக்கியதாகவும் கூறப்பட்டது.,

இதுகுறித்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் நேற்று கைது செய்த நிலையில் அவரை சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை அடுத்து அவரை அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை காவலில் வைக்க ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்