ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடனே நடக்கும் முன்னாள் முதல்வரின் திருமணம்!

ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடனே நடக்கும் முன்னாள் முதல்வரின் திருமணம்!

நாடு முழுவதும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு முடிந்த ஒரு சில நாட்களில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணம் நடைபெற உள்ளது

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் திருமணம் ஏப்ரல் 14ம் தேதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது இதனை குமாரசாமி அவர்கள் உறுதி செய்துள்ளார்

பெங்களூரில் உள்ள ராம்நகரில் தனது இல்லத்தில் மிக எளிமையாக இந்த திருமணம் நடத்த இரு குடும்பங்களும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த திருமணத்திற்கு 15 முதல் 20 நபர்கள் மட்டுமே அழைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இருப்பினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடிந்ததும் ராம் நகரில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு திருமண வரவேற்பு நடத்தவும் தான் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply