முன்னாள் நீதிபதி கர்ணனனின் கட்சி பெயர் என்ன தெரியுமா?

முன்னாள் நீதிபதி கர்ணனனின் கட்சி பெயர் என்ன தெரியுமா?

முன்னாள் கொல்கத்தா ஐகோர்ட்டின் நீதிபதி கர்ணன் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று அவர் தனது கட்சியில் பெயரை சற்றுமுன் அறிவித்துள்ளார். ‘ஊழல் எதிர்ப்பு டைனமிக் கட்சி’ என்பதுதான் அவருடைய கட்சியின் பெயர் . இந்த கட்சி தொடங்கிய கர்ணன் அவர்கள் கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்துள்ளார்.

நீதிபதி பதவியில் இருக்கும்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை விமர்சனம் செய்ததால் நீதிபதியாக இருக்கும்போதே சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் நீதிபதி கர்ணன் தற்போது ஆரம்பித்துள்ள கட்சியின் கொடி நீலம், மஞ்சள் மற்றும் பச்சை வண்ணம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த கொடியின் நடுவில் ஒரு கை லஞ்சம் வாங்குவது போலவும் இன்னொரு கை லஞ்சம் பெறுவது போலவும், அதை ஒரு கை தடுப்பது போலவும் உள்ளது. இந்தியாவில் தற்போது எண்ணிலடங்கா கட்சிகள் ஏற்கனவே இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சி உருவாகியுள்ளது

 

 

Leave a Reply