பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் என்பவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜக செயற்குழு கூட்டம் இன்று திருப்பூரில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும் என்பதால் பாஜகவில் இணைந்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.