சீன தலைவரை ரஷ்ய தலைவராக மாற்றிய விஜய்

சீன தலைவரை ரஷ்ய தலைவராக மாற்றிய விஜய்
puli vijay
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா கடந்த ஞாயிறு அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விழாவில் பேசிய விஜய், ஒரு குட்டி கதையை தனது ரசிகர்களுக்கு கூறினார்.

அந்த கதையில் சீன நாட்டின் முன்னாள் அதிபர் மாவோ என்று கூறுவதற்கு பதிலாக ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர் மாவோ என்று தவறுதலாக கூறிவிட்டார். எந்த ஒரு விஷயத்திலும் லென்ஸ் வைத்து குறைகளை கண்டுபிடிக்கும் நமது நெட்டிஸன்கள் அவர் பேசி முடித்த அடுத்த சில நிமிடங்களில் இதுகுறித்து ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்த தவறை விஜய்யிடம் அவரது பி.ஆர்.ஓ தெரிவித்தபோது உடனே விஜய் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  ‘பெரிய மேடைகளில் சில கருத்துக்களை நாம் தெரிவிக்குமோது இதுமாதிரியான தவறுகள் சிலசமயம் ஏற்பட்டு விடுகிறது. இதற்காக நான் வருந்துகிறேன். இருப்பினும் நான் கூறிய கதையின் கருத்து எனது ரசிகர்களிடம் சென்றடையும் என்று நம்புகிறேன்’ என்று விஜய் கூறியுள்ளார்.

Leave a Reply