தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டி நாட்டில் கடந்த சில நாட்களாக பயங்கரமான மழை பெய்து வருவதால் அந்நாட்டில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆயிரக்கனக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

புருண்டி நாட்டின் வெள்ளத்திற்கு இதுவரை 69 பேர் பலியானதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச மீட்புப்படைகளும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து மீட்புப்பணியை துரிதமாக கவனித்து வருகின்றனர்.

தலைநகர் புஜும்பாரா நகரத்தில் வெள்ளத்தோடு பலத்த காற்றும் வீசி வருவதால் சுமார் 20,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாலைகள் முற்றிலும் பழுதடைந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1eoQBWl” standard=”//www.youtube.com/v/KMcLA5RE4ZQ?fs=1″ vars=”ytid=KMcLA5RE4ZQ&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5435″ /]

Leave a Reply