தமிழகத்தில் 5 மாவட்டங்களில் திடீர் வெள்ளம்: அபாய எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் திடீர் வெள்ளம்: அபாய எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது

இதனால் கேஆர்பி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது