அதிர்ச்சி தகவல்

உள்நாட்டு விமான போக்குவரத்து மே 25ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கும் நிலையில் தற்போது விமானப் போக்குவரத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பதிவாகி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் தற்போது விமான கட்டணங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி சென்னை -பெங்களூரு மற்றும் சென்னை – கோவை ஆகிய நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய ரூபாய் 2000 முதல் 6 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சாதாரணமாக சென்னை-பெங்களூர் டிக்கெட் கட்டணம் ரூ.1500 வரை தான் முன்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விமானத்தில் தனிமனித இடைவெளி கடைபிடிப்பதற்காக மூன்றில் ஒரு பங்கு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதால் இந்த கட்டண உயர்வு இருக்கலாம் என தெரிகிறது

Leave a Reply