கொடி, பெயர் தயார்: விரைவில் அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறார் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது தனது அரசியல் வருகை குறித்து மறைமுகமாக தெரிவித்தார். சிஸ்டம் சரியில்லை, போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்ற அவருடைய பேச்சு தமிழக அரசியல் நிலையை பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அரசியலுக்கு வரவேண்டுமா? வரவேண்டாமா? என்று ஊசலாட்டத்தில் இருந்த ரஜினி, கமல் பிரச்சனைக்கு அதிரடியாக அரசியலில் குதிக்க முடிவெடுத்துவிட்டதாகவும், அவருடைய கட்சியை கமலும் ஆதரிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ரஜினிகாந்த் கட்சி கொடி மற்றும் பெயர் அனைத்தும் அவரால் உறுதி செய்யப்பட்டதாகவும், காலா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் முறைப்படி கட்சியின் அறிவிப்பை ரஜினியே அறிவிப்பார் என்றும் அவரது வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.