shadow

9கடந்த 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலையான பின்னர் இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதுமுதல் இந்த தடை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.

 இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து புதிய ஆட்சி மத்தியில் பதவியேற்க உள்ள நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து இன்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

 இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு வழங்குவதை அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவந்த பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என்ற சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை 5 வருடங்கள் நீட்டித்துள்ளதையும் இணைத்து பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது

Leave a Reply