ராஷ்ட்ரிய ஜனதா கட்சின் தலைவர் லாலு மாட்டு தீவன உழல் வழக்கில் குற்றவாளி  என அறிவிக்கப்பட்டு ‘மிர்சா முண்டா ‘ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று வீ டியோ கான்பிரின்சிங் மூலம் சிபிஐ சிறப்பு நீதிபதி பிறவாஸ் குமார் சிவ் அவருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 25 இலட்சம் ரூபாய்அபராதமும் அறிவித்தார்.  அது மட்டுமின்றி பாராளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யபட்டார். மற்றொரு முன்னாள் பீகார் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ராவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அதே வழக்கில் ரூ 5 லட்சம் அபராதம். குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு  ஜனதா தளம் ஐக்கிய எம்.பி. ஜகதீஷ் சர்மா நான்கு ஆண்டு கால சிறை தண்டனை கிடைத்தது. இன்று பிற்பகல் 3மணி அளவில் தீர்ப்பு வெளியானது. தீர்ப்பை கேட்ட லாலு அமைதியான மனநிலையில் காணப்பட்டார். அவரது இல்லம் அமைந்துள்ள ராஞ்சி பகுதியில் சற்றே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா, 6 அரசியல்வாதிகள் (ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜகதீஷ் சர்மா உள்பட), 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கான தண்டனை விவரம் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார். இதனையடுத்து, சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.கே.சிங் வீடியோ முன்பாக அவர்கள் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

 

Leave a Reply