5 மடங்கு மின்கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

chennai-high-court

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ஐந்து மடங்கு மின் கட்டணம், சொத்து வரி வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மின் இணைப்பு மற்றும் சொத்து வரி வசூலிக்கும் முன்னர் அந்த கட்டிடம் அனுமதியின்றி கட்டப்பட்டதா? என்பதை சரிபார்க்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மின் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை 5 மடங்கு அதிகமாக விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.