’வலிமை’ வெளியேறியதால் பொங்கலுக்கு ஐந்து படங்கள்!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நேற்று அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் ஐந்து படங்கள் இதோ:

1. கார்பன்

2. கொம்பு வச்ச சிங்கம்டா

3. ஐஸ்வர்யா முருகன்

4. நாய் சேகர்

5. மருத