லாலு பிரசாத் யாதவுக்கு 5 நாள் பரோல்! ஏன் தெரியுமா?

லாலு பிரசாத் யாதவுக்கு 5 நாள் பரோல்! ஏன் தெரியுமா?

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முன்னாள் பீகார் மாநில முதல்வருக்கு சிறை நிர்வாகம் ஐந்து நாட்கள் பரோல் வழங்கியுள்ளது. அவருடைய மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவே அவருக்கு இந்த பரோல் வழங்கப்பட்டிருப்பதாக சிறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

லாலு பிரசாத் யாவதவ்வின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவுக்கு வருகிற மே 12ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பரோல் கேட்டு ஜார்கண்ட் சிறைத்துறை ஐ.ஜி.யிடம் லாலு பிரசாத் நேற்று முன்தினம் மனு அளித்தார்.

அந்த மனு அட்டார்னி ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லாலு பிராசத் 5 நாள் பரோலில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, லாலு பிரசாத் ராஞ்சியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.