shadow

சீனாவில் முதல்முறையாக தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்

சீன தலைநகர் பீஜிங் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரிந்து வரும் தமிழர்கள் சுமார் 70 பேர் இணைந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பீஜிங் தமிழ்ச் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை தொடங்கினார்கள். தற்போது அந்த சங்கத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் வருகிற 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பீஜிங் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்கு தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பீஜிங் நகரில் பணிபுரியும் தமிழர்கள், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்கள், சீன சர்வதேச வானொலியின் தமிழ் பிரிவில் பணியாற்றும் தமிழர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
வரும் 14ஆம்தேதி தமிழ்ப்புத்தாண்டு வரவுள்ள நிலையில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த புத்தாண்டை கொண்டாட தயாராகி வரும் நிலையில் முதன்முறையாக சீனாவில் உள்ள தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ்புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டு சீனாவில் வெகுசிறப்பாக கொண்டாடப்படும் என்று பீஜிங் தமிழ்ச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply