புதுச்சேரியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு!

புதுச்சேரியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு!

புதுச்சேரி மாஹேவில் கொரோனா பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து புதுவையில் கொரோனாவினால் முதல் உயிர் பலியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏப்.14-ல் முடிவடையும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க கோருவோம் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 7 ஆக இருந்த நிலையில் தற்போது ஒருவர் இறந்துவிட்டதால் தற்போது 6ஆக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதுவை அரியாங்குப்பம் சொர்ணா நகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply