shadow

150 ஆண்டுக்குப் பின் முழு நீல நிலவு சந்திரகிரகணம்: இந்தியாவில் தெரியுமா?

150 ஆண்டுகளுக்கு பின்னர் நீல நிலவு எனப்படும் முழு நிலவு சந்திரகிரகணம் ஜனவரி 31ம் தேதி நிகழ இருப்பதால் வானியல் ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் அந்த நாளை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும். 2018ம் ஆண்டில் தோன்றும் இந்த முதல் சந்திரகிரகணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முன்னர் 1866 மார்ச் 31ம் தேதி தோன்றிய முழு நிலவு சந்திரகிரகணம் தற்போது 152 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நிகழ இருக்கிறது. இந்த கிரகணம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த முழு நிலவு சந்திரகிரகணத்தை மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேஷியா, நியுசிலாந்து, ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் நன்றாகக் காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதேபோன்ற அடுத்த நீல நிலவு கிரகணம் 2028 டிசம்பர் 31ம் தேதியும் அ2037 ஜனவரி 31ம் தேதியும் தோன்றும் என விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.

ஜனவரி 31ஆம் தேதி முழுநிலவு கிரகணத்தை கண்டு ரசிக்க சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

Leave a Reply