கானா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957-ல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடாகும்.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1836 – டெக்சாசில் அலாமோ நகரை மெக்சிகோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர். * 1869 – திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்பித்தார். * 1940 – குளிர்காலப் போர்: பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. * 1945 – ருமேனியாவில் கம்யூனிச அரசு பதவிக்கு வந்தது. * 1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தினபடி பிரான்ஸ் வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக்கொண்டது.
* 1953 – ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார். * 1957 – ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன. * 1964 – காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.
* 1975 – ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன. * 1987 – பிரித்தானியாவின் எம்எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 193 பேர் கொல்லப்பட்டனர். * 2007 – இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.