shadow

shadow

மும்பையின் முக்கிய ரயில் நிலையமான சத்ரபதி சிவாஜி (சிஎஸ்டி) ரயில் நிலையத்தில் நேற்று மாலை  ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிஎஸ்டி ரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ள ரயில்வே நிர்வாக அலுவலக கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் நேற்று, மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த  தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தை தொடர்ந்து அலுவலக கட்டிடத்தில் இருந்த 35 ஊழியர்களை உடனடியாக வெளியேற்றிய தீயணைப்பு படைவீரர்கள், தீயை கட்டுப்படுத்த பலமணி நேரம் போராடினர்.  கட்டிடத்தின் கீழ் நின்றுகொண்டிருந்த பொதுமக்களும் ரயில் பயணிகளும் அலறியடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு ஓடினர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும் அலுவகத்தில் இருந்த முக்கிய பைல்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் தீயில் கருகி சாம்பலாயின.

இந்த தீவிபத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1வது பிளட்பாரத்திலிருந்து புறநகர் ரயில் இயக்கப்படுவது உடனடியாக சில மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் அவதிப்பட்டனர். அவர்களுடைய வசதிக்காக நேற்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Leave a Reply