சென்னை விமான நிலையத்தில் கழுகு போன்ற பறவைகள் அடிக்கடி விமானத்தின் குறுக்கே பறந்து வருவதை தடுப்பதற்காக வெடிகளை கொளுத்தி வானில் பறக்கவிடுவது வழக்கம். அதுபோன்று இன்று மதியம் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் வெடிகளை கொளுத்தி போட்டபோது, வெடியின் ஒரு பகுதி விமான நிலைய கட்டிடத்தில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக கட்டிடத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் தீப்பற்றிக்கொண்டதால் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக எவ்வித உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக சென்னை விமானங்கள் கிளம்புவதில் சிறிது நேரங்கள் தாமதம் ஏற்பட்டது.

Leave a Reply