shadow

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான எப்.ஐ.ஆர் திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில் இந்த படம் தற்போது அமேசான் ஓடிடியில் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 12ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்த படம் அமேசான் ஓடிடியில் இருக்கும் என்றும் ரசிகர்கள் இந்த படத்தை தேர்வு செய்து பார்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

விஷ்ணு விஷால், ரெபா மோனிகா, கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், பார்வதி, கௌரவ் நாராயணன், ரைசா வில்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார். அஸ்வத் இசையில், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படம் உருவாகியுள்ளது.