shadow

மீன் வறுவல

தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன்
தனியா தூள் – 1 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1
முட்டை – 1
ரொட்டி தூள் – 100 கிராம்

செய்முறை :

* மீனை தோல், முள் நீக்கிவிட்டு விரல் வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி பேஸ்டு பதத்திற்கு கலக்கவும்.

* மீனை இந்த கலவையில் போட்டு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

* முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளவும்.

* எண்ணெய் நன்கு சூடானவுடன் மிதமான தீயில் வைக்கவும்.

* மசாலா தடவிய மீன் துண்டுகளை ரொட்டி தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

* இதை தக்காளி சாசுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Leave a Reply