செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது 20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த அறிவிப்பு குறித்து நிதித்துறை அமைச்சர் தெளிவாக விவரிப்பார் என்றும், நடுத்தர குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க இருப்பதாகவும், ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை வெளியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply