இந்திய அளவில் சினிமாத்துறையில் தேசிய விருதுக்கு அடுத்தபடியாக மதிப்பு மிகுந்த விருதாக பிலிம்பேர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் வெகுபிரமாண்டமாக நடைபெற்றது.

நேற்று நடந்த 59வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ‘பாக் மில்கா பாக்’ என்ற படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் பர்கான் அக்தருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகை விருது ராம் லீலா படத்தில் சிறப்பாக நடித்த தீபிகா படுகோனேவுக்கு வழங்கப்பட்டது.

ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான தனுஷ், சிறந்த அறிமுக நாயகன் விருது பெற்றார். சிறந்த அறிமுக நடிகை விருது வாணி கபூருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நடிகை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ரன்பீர் கபூரும் தொகுத்து வழங்கினர்.

Leave a Reply