shadow

ராஜபக்சே பாதுகாப்பு விவகாரம். இலங்கை பாராளுமன்றத்தில் அடிதடி. எம்.பி படுகாயம்

rajapakseகடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்த பின்னர் அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் பல்வேறு வழக்குகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் தற்போது திடீரென அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ராணுவ பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்கு பதிலாக தற்போது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த திடீர் மாற்றம் காரணமாக நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ஆவேசமாக குரல் கொடுத்தனர்.

ராஜபக்சே ஆதரவு எம்.பிக்களுக்கு பதில் அளித்த பிராந்திய வளர்ச்சி மந்திரி சரத் பொன்சேகா, அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார். அப்போது ராஜபக்சே ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கினர். இதில் பல எம்.பி.க்கள் காயம் அடைந்தனர். ஒரு எம்.பி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

Leave a Reply