அரியவகை ஆப்பிரிக்கா சிங்கத்தை தத்து எடுத்த 12ஆம் வகுப்பு மாணவி

ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் அரியவகை ஆப்பிரிக்க நாட்டின் சிங்கம் ஒன்று உள்ளது

பெண் சிங்கமான இந்த சிங்கத்தை பராமரிக்க அதிக செலவு செய்யப்படுவதாக அந்தப் பூங்காவின் நிர்வாகிகள் தெரிவித்தனர்

இதனை அறிந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி அக்சிதா என்பவர் தன்னுடைய சேமிப்பு பணம் ரூபாய் ஒரு லட்சத்தை அந்த சிங்கத்திற்கு செலவு செய்ய முடிவு செய்தார்

இதனையடுத்து அந்த சிங்கத்தை ஒரு வருடத்துக்கு அவர் தத்தெடுத்துள்ளார் இந்த ஒரு வருடத்தில் அந்த சிங்கத்திற்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார் இதனை அடுத்து அந்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply