அடுத்த 6 மாதங்களுக்குள் 42,000 பேருக்கு மத்திய அரசு வேலை!!!

மத்திய அரசு ட்விட்டர் பக்கத்தில், மத்தியப் பணியாளர் தேர்வாணையம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘இந்திய அரசில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் விரைவில் அளிக்கப்பட உள்ளன.

வருகிற 6 மாதத்திற்குள் அதாவது 2022 ஆண்டு இறுதிக்குள் 15,247 பதவிகளுக்கான பணி நியமன முடிவுகள் இறுதி செய்யப்பட்டு விடும்.

இதன் மூலம் 42,000 பேர் மத்திய அரசு வேலைகளில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து 67,768 காலி இடங்களை நிரப்புவதற்கான செயல் திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது’’ என பதிவிட்டுள்ளது.