shadow

mercy killஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய ஆறு குழந்தைகளையும் கருணைக்கொலை செய்ய அனுமதிக்கமாறு குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உ.பி.மாநிலத்தை சேர்ந்த முகமது நசீர் என்பவருக்கு மொத்தம் எட்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் முதல் குழந்தை மற்றும் எட்டாவது குழந்தையை தவிர மீதியுள்ள ஆறு குழந்தைகளும் ’கெனாவன்’ எனப்படும் அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த ஆறு குழந்தைகளின் இடுப்புக்கு கீழே உடல் மெல்ல, மெல்ல செயலிழக்கத் தொடங்கியுள்ளதால்  கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் மருத்துவர்கள் அந்தக் குழந்தைகளுக்கு அரியவகை நரம்பியல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்க பல லட்ச ரூபாய் தேவைப்படும் என்றும் கூறிவிட்டனர். லட்சக்கணக்கில் தன்னால் செலவிட முடியாது என்பதால் 6 குழந்தைகளையும் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நசீர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ஆறு குழந்தைகளின் சிகிச்சைக்கு உண்டான செலவை மத்திய அரசே ஏற்கவேண்டும் என உ.பி.,யில் உள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே  37 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த மும்பை செவிலியர் அருணா செண்பக்கை கருணைக்கொலை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளதால் முகமது நசீரின் கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply