3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை:

லாக்டவுன் வறுமை காரணமா?

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடமங்கலம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற கூலித்தொழிலாளி தனது 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆறுமுகத்தின் மனைவி வேலைக்கு சென்றிருந்த போது, தனது 12 வயது மகள் ராஜேஸ்வரி, 10 வயது மகள் ஷாலினி மற்றும் 8 வயது மகன் சேதுராமன் ஆகிய மூவரையும் கொலை செய்துவிட்டு அதன்பின் தானும் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி தனது குடும்பத்தினர் அனைவரும் இறந்து கிடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆறுமுகம் லாக்டவுனால் ஏற்பட்ட வறுமை காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும் முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.